/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் வீடுகள் விலை 16 சதவீதம் உயர்வு சந்தை நிலவர ஆய்வில் தகவல்
/
சென்னையில் வீடுகள் விலை 16 சதவீதம் உயர்வு சந்தை நிலவர ஆய்வில் தகவல்
சென்னையில் வீடுகள் விலை 16 சதவீதம் உயர்வு சந்தை நிலவர ஆய்வில் தகவல்
சென்னையில் வீடுகள் விலை 16 சதவீதம் உயர்வு சந்தை நிலவர ஆய்வில் தகவல்
UPDATED : ஜன 30, 2026 05:46 AM
ADDED : ஜன 30, 2026 05:45 AM

சென்னை: சென்னையில் வீடுகள் விலை, 16 சதவீதம் உயர்ந்துள்ளதாக, 'நைட் பிராங்க்' நிறுவனத்தின் சந்தை நிலவர ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், குடியிருப்பு திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அடுக்குமாடி திட்டங்களை செயல்படுத்துவதில், கட்டுமான நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இதில் அதிக வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் படுக்கை அறை கொண்ட வீடுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
சென்னையில், 2025ம் ஆண்டில், 20,865 வீடுகள் கொண்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 2024ம் ஆண்டை விட இது, 20 சதவீதம் அதிகம். இதில், 2025ல் 18,262 வீடுகள் விற்பனை ஆகி உள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 12 சதவீதம் அதிகம்.
![]() |
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வீடுகள் விற்பனை விபரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்ததில், ஒட்டுமொத்த சராசரி விலை 7 சதவீதம் வரையும், அதிகபட்ச விலை உயர்வு என்ற அடிப்படையில், 16 சதவீதம் வரையும் வீடுகள் விலை உயர்ந்துள்ளன என, நைட் பிராங்க் நிறுவனத்தின் சந்தை நிலவர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் விலை உயர்வு, பதிவு செலவுகள், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, கட்டட அனுமதி தொடர்பான நிர்வாக செலவுகள் அதிகரிப்பே இதற்கு காரணம் என, கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.


