தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை


UPDATED : பிப் 01, 2026 01:43 PM

ADDED : பிப் 01, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 01:43 PM ADDED : பிப் 01, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காப்பர் ஒயர் திருடிய இருவர் கைது

குன்றத்துார்: திருமுடிவாக்கத்தைச் சேர்ந்தவர் பொன்மணி, 28. இவர், திருநீர்மலை பிரதான சாலையில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதி உடற்பயிற்சி கூட 'ஏசி' இயந்திரத்தின் காப்பர் ஒயரை மர்ம நபர்கள் அறுத்து, திருடி சென்றனர். விசாரித்த திருமுடிவாக்கம் போலீசார், பம்மல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத், 20, எலக்ட்ரீஷியன் ஸ்டாலின், 19, ஆகியோரை கைது செய்தனர்.

ஆற்றில் விழுந்தவர் உடல் மீட்பு

சென்னை: கோட்டூர்புரம் அடையாறு ஆற்றில், மர்ம நபர் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பின், அவரது உடலை போலீசார் நேற்று மீட்டனர்.விசாரணையில், ராயப்பேட்டையை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் கோபிநாத், 43, என்பது தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us