/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறில் சேதமான பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவு மாணவர்கள் வெளியேற்றத்தை எதிர்த்து பெற்றோர் மறியல்
/
அடையாறில் சேதமான பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவு மாணவர்கள் வெளியேற்றத்தை எதிர்த்து பெற்றோர் மறியல்
அடையாறில் சேதமான பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவு மாணவர்கள் வெளியேற்றத்தை எதிர்த்து பெற்றோர் மறியல்
அடையாறில் சேதமான பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவு மாணவர்கள் வெளியேற்றத்தை எதிர்த்து பெற்றோர் மறியல்
ADDED : பிப் 01, 2026 05:44 AM

சென்னை: சென்னை அடையாறில் மிகவும் சேதமடைந்துள்ள தனியார் பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவு செய்த நிர்வாகம், மாணவ - மாணவியரை வேறு பள்ளியில் சேர்க்க கடிதம் எழுதி வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, அடையாறு, காந்தி நகரில் உள்ள குமாரராணி மீனா முத்தையா மேல்நிலைப் பள்ளியில், 1,400 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் மிகவும் சேதமடைந்து உள்ளதால், இந்த கல்வியாண்டு முடிந்ததும் இடிக்க, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, இந்த கல்வியாண்டுடன் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க, டி.சி., வாங்கி செல்ல சம்மதம் தெரிவிப்பதாக, பெற்றோரிடம் கடிதம் வாங்கியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், நேற்று அடையாறு, சர்தார் படேல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அடையாறு போலீசார், போக்குவரத்து பாதிப்பை கூறியும் அவர்கள் கலையவில்லை. பின், பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்தனர்.
வேளச்சேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, போராட்டக்காரர்களுடன் பேசிய பின், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து, மாணவர்களை வெளியே அனுப்புவதில்லை எனக்கூறி, எழுதி வாங்கிய கடிதங்களை கிழித்து எறிந்த பின், அனைவரும் கலைந்து செ ன்றனர்.
எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா கூறியதாவது:
ஒரே நேரத்தில் அனைவரையும் வெளியே அனுப்பினால், வேறு பள்ளிகளில் இடம் கிடைக்காது. படிப்பும் பாதிக்கும். கல்வித்துறை அதிகாரிகள், மாணவ - மாணவியரை வெளியே அனுப்பாமல், ஒவ்வொரு கட்டமாக பணி செய்ய வலியுறுத்தி உள்ளனர்.
இடப்பற்றாக்குறை இருந்தால், கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான வேறு பள்ளியிலோ அல்லது அவர்கள் இடத்தில் தற்காலிக வகுப்பறை கட்டி பாடம் நடத்தவோ வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்று, மாணவர்களை வெளியே அனுப்புவதில்லை என, பள்ளி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். பாதுகாப்பு காரணம் இருந்தால், மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடம் சேதமடைந்துள்ளது. அவ்வப்போது சீரமைத்து பயன்படுத்தி வருகிறோம். மிகவும் சேதமடைந்ததால், இடிக்க முடிவு செய்தோம்.
மேல் பூச்சு பெயர்ந்துள்ளதால், பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இதை பெற்றோரிடம் எடுத்து கூறியும், அவர்கள் கேட்கவில்லை. மாணவ - மாணவியரை வெளியே அனுப்பாமல், மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

