sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிரைம் கார்னர்: சென்னை

/

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : பிப் 04, 2026 05:56 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை மாத்திரை விற்ற இருவர் கைது

திருமங்கலம்: திருமங்கலம், வடக்கு பிரதான சாலையில், போதை பொருள் தடுப்பு போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும்படி, 'டியோ' ஸ்கூட்டரில் நின்ற இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், போதைக்கு பயன்படுத்தப்படும்,'டைடல்' என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து பாரிவாக்கத்தை சேர்ந்த சூர்யா, 24, மாதவன், 21 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சீனிவாசா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 36; ஓட்டுநர். இவர் கடந்த 1ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சென்றார். பின், நேற்று காலை வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஐந்து சவரன் நகை, 5,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us