தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை

 கிரைம் கார்னர்: சென்னை


ADDED : ஜூன் 18, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேருந்தில் மூதாட்டியிடம் திருட்டு

பெரம்பூர்: கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி, 62. ஐ.சி.எப்.,பில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம், ஐ.சி.எப்., பேருந்து நிலையத்தில் தடம் எண் '46' மாநகர பேருந்தில் ஏறிய இவர், வீனஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

அப்போது, தண்ணீர் வாங்க பையில் இருந்த பணத்தை எடுத்தபோது, சீட்டு கட்ட வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. சாந்தி, செம்பியம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரூ.25 லட்சம் போதை பொருள் பறிமுதல்

முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை எஸ்.வி., கோவில் தெரு வழியாக வந்த, 'சுசூகி பர்க்மேன்ʼ ஸ்கூட்டரை, நேற்று முன்தினம் இரவு, முத்தியால்பேட்டை போலீசார் நிறுத்தினர். வாகனத்தை சோதனை செய்ததில், 25 லட்சம் ரூபாய் மதிப்பு 850 கிராம் மெத் ஆம்பெட்டமைன் எனும் போதை பொருள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த ராயபுரத்தைச் சேர்ந்த அப்துல் ஜாபர், 42, அப்துல்நாசர், 65, ஆகியோரை கைது செய்தனர்.

28 சவரன் நகைகள் திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வல்லம் கூட்டுச்சாலை, தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 62; கார் ஓட்டுநர். நேற்று காலை, தன் மகளை செங்கல்பட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஆரம், வளையல் உள்ளிட்ட 28 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

மாநகராட்சி அதிகாரி தற்கொலை முயற்சி

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையைச் சேர்ந்தவர் கண்ணகி, 57; மாநகராட்சி டி.ஆர்.ஓ.,வான இவர், நேற்று மாலை 4:30 மணிக்கு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது கணவர் மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மேல் சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. கண்ணகியின் கணவர் சார் - பதிவாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பைக் திருடிய மெக்கானிக் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி, ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 34; தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டில் நிறுத்தியிருந்த 'ஹோண்டா யுனிகார்ன்' பைக், 16ம் தேதி திருடுபோனது. விசாரித்த பெரம்பூர் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக்கான தீபக், 27, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us