ADDED : ஜூன் 18, 2026 03:29 AM

அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சந்திப்பில் இருந்து மதுரவாயல் நோக்கி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நீர்வளத் துறை சார்பில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதனால், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சந்திப்பில், மதுரவாயல் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் வைக்கப்பட்டன.
வடிகால் பணிக்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பது குறித்து, அம்பத்துார் போலீசார் முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. வா க னங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் நேற்று, கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனால், 'பீக் அவர்ஸ்' நேரத்தில், சி.டி.எச்., சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மாற்றுவழியான அத்திப்பட்டு பிரதான சாலை மற்றும் வள்ளலார் தெருவிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாற்று வழி சி.டி.எச்., சாலையில், அம்பத்துார் தொழிற்பேட்டை சந்திப்பில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, சிக்னல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கனரக மற்றும் இலகுரக வாகனங் கள், அம்பத்துார் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் சென்று, ஆம்பிட் சாலை அல்லது அம்பத்துார் தொழிற் பேட்டை சாலை வழியாக, மதுரவாயல் செல்லாம்.
அதேபோல், பைக் மற்றும் ஆட்டோக்கள், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சந்திப்பு அருகே, அத்திப்பட்டு பிரதான சாலை மற்றும் வள்ளலார் தெரு வழியாக செல்லலாம்.
