ADDED : ஜூன் 22, 2026 12:47 AM

காணிக்கை திருடிய இருவர் கைது
புழல்: அம்பத்துார் -- புழல் சாலையில் உள்ள பவானி முத்துமாரியம்மன் கோவிலில் இம்மாதம், 16ம் தேதி நள்ளிரவு புகுந்த இருவர், உண்டியலை உடைத்து 5,000 ரூபாய் காணிக்கையை திருடிச் சென்றனர்.
புழல் போலீசார் விசாரித்து, வியாசர்பாடியைச் சேர்ந்த பிரகாஷ், 24, கொடுங்கையூர் கிஷோர், 22, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
பைக் எரித்தவர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் நாகராஜ், 34. வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இவரது பைக்கை, தீ வைத்து எரித்த, அதே பகுதி விஜய், 21, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மது போதையில் இருந்த விஜய், அப்பகுதியில் உள்ள வாகனங்களை சேதப்படுத்தியதும், நாகராஜின் பைக்குக்கு தீ வைத்து எரித்ததும் தெரிந்தது.
கஞ்சா பதுக்கிய ரவுடி கைது
பேசின்பாலம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் 'ஒற்றைக்கண்' ஜெயபால், 66; ரவுடி. புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில், இவர் மீது, 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பேசின் பாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, பேசின் பாலம், போலீசார் நேற்று கைது செய்தனர்.
குட்கா கடத்தியவர் சிக்கினார்
ராஜமங்கலம்: ராஜமங்கலம் பகுதியில் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம், 38, என்பவரை பிடித்தனர். ஆந்திராவில் இருந்து, 130 பாக்கெட் குட்கா பொருட்களை கடத்தி வந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.
