தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை


ADDED : ஜூன் 22, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 01:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் கைது:

செம்பியம்: பெரம்பூர், படேல் சாலையைச் சேர்ந்தவர் சிவஆனந்த், 38; கப்பலில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் மோனிகா, 31, என்பவருக்கும், 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, மோனிகாவை சிவஆனந்த், அவரது பெற்றோர் தாக்கியதாக கூறப்படுகிறது. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மோனிகாவுக்கு மூன்று தையல் போடப்பட்டது. செம்பியம் போலீசார், சிவஆனந்த், அவரது பெற்றோரை நேற்று கைது செய்தனர்.

போதை பொருள் விற்ற மூவர் கைது

வேப்பேரி: வேப்பேரி, ஜோதி வெங்கடாசலம் தெருவில் நேற்று முன்தினம் இரவு ஒரு காரை, போலீசார் வழிமறித்தனர். காரில் நொளம்பூரைச் சேர்ந்த சங்கீதா, 40, ஓட்டுநர் சிரஞ்சீவி, 29, முகலிவாக்கம் ஜான், 35, ஆகியோர் இருந்தனர்.

காரில் 26.35 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள், 21 போதை ஸ்டாம்ப், 5.59 கிராம் போதை மாத்திரைகள் இருந்தன. மூவரையும் கைது செய்த போலீசார், கார் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us