ADDED : ஜூலை 04, 2026 02:02 AM

அ நிறம் | அளவு
உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
ஆலந்துார்: ஆலந்துார், வடக்கு ராஜா தெருவில் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைராஜ், 38; லஞ்ச ஒழிப்பு துறை சப் - -இன்ஸ்பெக்டர். பரங்கிமலை சுரங்க நடைபாதையில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற துரைராஜை, மர்ம நபர்கள் மூவர் வழிமறித்து தாக்கி, அவரது மொபைல் போன், பணம் பறிக்க முயன்றனர். துரைராஜ் சத்தம் கேட்டு பொதுமக்கள் வரவும், மூவரும் தப்பினர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
