ADDED : ஆக 20, 2026 03:02 AM
நேபாள நபர் மர்ம மரணம்
திருவேற்காடு: நேபாள நாட்டைச் சேர்ந்த கேன்பகதுார், 45, சென்னை முகப்பேரில் உள்ள அவரது தங்கை அஸ்மிதா, 35, வீட்டிற்கு வந்தார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடைபயிற்சி செல்வதாக கூறி சென்றவர், திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் காயங்கள் இருப்பதால், தவறி விழுந்து இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என, திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்ணிடம் தகராறு; 'டெலிவரி' ஊழியர் கைது
கோட்டூர்புரம்: கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த, 25 வயது பெண், தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த உணவு டெலி வரி ஊழியர் மணி, 25, என்பவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் மணியிடம் பேசுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். இதனால், அப்பெண்ணின் வீடு சென்று தகராறு செய்த மணியை , போலீசார் நேற்று கைது செய்தனர்.
போன் கடையில் குட்கா விற்றவர் கைது
மாதவரம்: மாதவரம், எம்.ஆர்.எச்., சாலை பஜார் அருகே, அசோக், 35, என்பவர் மொபைல்போன் விற்பனை கடை வைத்துள்ளார். இந்த கடையில் பான்பராக், புகையிலை உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்று வந்ததால், போலீசார் அசோக்கை நேற்று கைது செய்தனர். 25,000 ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
