ADDED : ஆக 20, 2026 03:03 AM
அ நிறம் | அளவு
பெண்ணிற்கு டார்ச்சர்: த.வெ.க., உறுப்பினர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது நபரின் மகளான 26 வயது பெண்ணுக்கு, தந்தை வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமை யாளர், மொபைல் போனில் தேவையில்லாத படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். போலீசாரின் விசாரணையில், புளியந்தோப்பு, டிமலஸ் சாலையைச் சேர்ந்த ஜோசப் சேவியர், 48, என்பதும், த.வெ.க., உறுப்பினர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
