தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை

 கிரைம் கார்னர்:சென்னை


ADDED : செப் 21, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த ரவுடி கைது



காசிமேடு: திருவொற்றியூர், அப்பர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த செல்வபதி, 29. கடந்த 2021ல், காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய போலீசாரால், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்தவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நேற்று முன்தினம் இரவு செல்வபதியை, தனிப்படை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



பெண் தற்கொலை: கள்ளக்காதலனுக்கு 'காப்பு'

அயனாவரம்: அயனாவரம், பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காஞ்சனா, 38. கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த இவருக்கும், ஓட்டேரியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கோகுல், 30, என்பவருக்கும், மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. இந்த நிலையில், கோகுலுக்கு வேறு பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காஞ்சனா, ஜூன் 28ல் அயனாவரத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். காஞ்சனா தற்கொலைக்கு காரணமான கோகுலை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

வீட்டில் குட்கா பதுக்கிய மூவர் சிக்கினர்

கொடுங்கையூர்: சின்ன கொடுங்கையூர் பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வேதகிரி, 45, திருமலை, 51, மற்றும் குரு கணேஷ், 24, ஆகியோரை, கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்து, ஐந்தரை கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பதுக்கிய தி.மு.க., நிர்வாகி கைது

செம்பியம்: பெரம்பூர், கார்பென்டர் தெருவில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த 75வது வார்டு தி.மு.க., இளைஞரணி நிர்வாகியான நரேஷ், 32, சையது சேட்டு, 40, முகமது சனல்லா, 42, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா, மூன்று பைக்குகள், 79,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

திரு.வி.க., நகர்: திரு.வி.க., நகர், இந்திரா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுன், 23. இவர், 10ம் வகுப்பு வரை படித்து, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால், அர்ஜுனின் தாய், அவரை வேலைக்கு செல்லுமாறு கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த அர்ஜுன், நேற்று முன்தினம் இரவு படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளார். சந்தேகமடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நேற்று கதவை உடைத்து பார்த்தபோது, துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுக்கடையில் தகராறு செய்த ரவுடிகள்

எம்.கே.பி., நகர்: வியாசர்பாடி, எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ராகேஷ், 26; ரவுடி. கடந்த 19ம் தேதி மாலை வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள 'டாஸ்மாக்' மதுபான கடையில் மது அருந்த சென்றார். அங்கு வியாசர்பாடி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த முத்து, 26, என்பவரும் வந்துள்ளார். ராகேஷ் வாங்கிய மதுவில் பாதி தனக்கு தரும்படி முத்து கேட்டுள்ளார்.

இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இருவரையும் பிடித்து எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுக்கூட ஊழியரை தாக்கியோர் கைது

திருவான்மியூர்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 32. திருவான்மியூரில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் பணி புரிகிறார். கடந்த 17ம் தேதி, போதையில் இருந்த ரமேஷ் என்பவர் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் மது பாட்டிலை, அருகில் இருந்த நான்கு பேர் பறிக்க முயன்றனர்.

தடுக்க முயன்ற சதீஷ்குமாரை, பீர் பாட்டில், கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த சதீஷ்குமார், அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

திருவான்மியூர் போலீசாரின் விசாரணையில், பெருங்குடியைச் சேர்ந்த சிவா, 23, சரத், 24, உள்ளிட்ட நான்கு பேர் என தெரிந்தது. நேற்று, இவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us