ADDED : செப் 21, 2026 02:03 AM
வீடு, கடைகளில் திருடிய மூவர் சிக்கினர்
பல்லாவரம்: பல்லாவரம் அருகே, பம்மல் ஈஸ்வரன் நகர் பகுதியில், கடந்த 15ம் தேதி இரவு, பால் மற்றும் கேக் விற்பனை செய்யும் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்தும், முப்பாளத்தம்மன் கோவில் உண்டியல் உடைத்தும் பணம் திருடப்பட்டது.
தவிர, ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 3.5 சவரன் தங்க நகைகளையும், மர்ம நபர்கள் திருடினர். சங்கர் நகர் போலீசார் விசாரித்து, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமண், 22, சக்திவேல், 23, சஞ்சய், 20, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தலைமறைவு குற்றவாளி பிடிபட்டார்
கோட்டூர்புரம்: கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், 2021ம் ஆண்டு பதிவான வழிப்பறி வழக்கில், கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. ஜாமினில் வந்தவர் சுரேஷ் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்ய, செப்., 11ல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
