தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


UPDATED : அக் 15, 2026 02:50 PM

ADDED : அக் 15, 2026 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 02:50 PM ADDED : அக் 15, 2026 10:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணின் தந்தைக்கு கத்திக்குத்து

பெசன்ட் நகர்: நேபாளத்தை சேர்ந்த தில்தமாய், 39, பெசன்ட் நகரில் ஒரு வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து, குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவரது மகளை, அதே வீட்டில் சமையலராக பணிபுரியும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுஜித்முகியா, 22, காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்தார்.

இதை, நேற்று முன்தினம் இரவு தட்டிக்கேட்ட தில்தமாயை, கத்தியால் குத்தி சுஜித்முகியா தப்பினார். சாஸ்திரி நகர் போலீசார் விசாரித்து, சுஜித்முகியா, அவருக்கு உதவிய அமர்ஜித் அமர் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

பெண்ணுக்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்தவர் கைது

தேனாம்பேட்டை: தேனாம்பேட்டையச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த, தேனாம்பேட்டையைச் சேர்ந்த இம்மானுவேல், 21, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

துணிகள் திருடிய பெண் சிக்கினார்

தி.நகர்: தி.நகர், ராமேஸ்வரம் சாலை நடைபாதையில் முருகன், 45, நடத்திவரும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த, 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புது துணிகள் அடங்கிய மூட்டை, கடந்த 7ல் திருடுபோனது. இதை திருடிய மேகலா, 52, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது, துணிகளை மீட்டனர்.

ஏ.டி.எம்.,மில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பணம் திருட்டு

அரும்பாக்கம்: அரும்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன், 18, நேற்று, எம்.எம்.டி.ஏ., காலனியில் தனியார் ஏ.டி.எம்., இயந்திரத்தில் தன் வங்கி கணக்கு அட்டைய சொருகி, 10 ஆயிரம் ரூபாய் எடுக்க குறிப்பிட்டார். பணம் வரவில்லை; ஆனால், பணம் எடுக்கப்பட்டதாக அவரது மொபைல் போனுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவர், அங்கிருந்த கடைக்காரர் உதவியுடன் இயந்திரத்தைச் சோதித்தபோது, பணம் வெளியே வரும் பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்து, தன் பணத்தை மீட்டு தரவேண்டும் என புகார் அளித்துள்ளார்.

வீட்டில் கஞ்சா விற்ற திருநங்கைக்கு ‘கம்பி’

அயனாவரம்: அயனாவரம், புதுநகர் குறுக்கு தெருவில், வீட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பழைய குற்றவாளியான திருநங்கை சஞ்சனா, 30, என்பவரை அயனாவரம் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கிரைம் கார்னர்

பெண் துாய்மை பணியாளர் வீட்டில் திருட்டு

எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 47; ஓமந்துாரர் அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர். நேற்று முன்தினம் மதியம், இவரது வீட்டு கதவின் பூட்டை மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ஐந்து கிராம் தங்க நகை, 15,000 ரூபாயை திருடி சென்றனர். முத்துலட்சுமி புகாரை, எம்.கே.பி., நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணிற்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்தவர் கைது

இதேபோல் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்த ரூபேஷ், 25, என்பவரை, விருகம்பாக்கம் போலீசார், நேற்று கைது செய்தனர்.

ஐ.டி., பெண் ஊழியருக்கு தொல்லை

அண்ணா நகர்: அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது பெண், போரூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றியபோது, 2022ல் சதீஷ், 33, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்து, அவர் பழகியதை அறிந்த அப்பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இருப்பினும், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி பெண்ணுக்கு, சதீஷ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற நண்பர்களுக்கு ‘காப்பு’

அரும்பாக்கம்: அமைந்தகரையைச் சேர்ந்த ஹரிஷ், 28, சூர்யா, 24, பவித்குமார், 24, லோகேஷ், 28, மனோஜ்குமார், 27, ஆகிய ஐந்து பேரும், அரும்பாக்கம் திருமகள் தெருவில் நேற்று நின்றிருந்தனர். அவ்வழியில் ரோந்து பணியில் இருந்து போலீசார் சோதனையில், இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஐவரும் கைதாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us