தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


UPDATED : அக் 15, 2026 05:45 PM

ADDED : அக் 15, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:45 PM ADDED : அக் 15, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிதி நிறுவனர் வீட்டில் திருடியவர் சிக்கினார்

மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலம், பாலகிருஷ்ணன் தெரு விரிவு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில், கடந்த 3ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், 16 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.

அசோக் நகர் போலீசார் விசாரித்து, அம்பத்தூர், புதுார் பகுதியைச் சேர்ந்த பேட்டா என்ற அஸ்வின், 22, என்பவரை நேற்று கைது செய்தனர். 10 கிராம் தங்க செயின் மட்டும் மீட்கப்பட்டது. மற்ற நகைகளை விற்று செலவு செய்தது தெரிந்தது. இவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.

11 கிலோ கஞ்சா பறிமுதல்

பரங்கிமலை: திரிபுரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட, 11 கிலோ கஞ்சாவை, பரங்கிமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, திரிபுரா, சேபஹிஜரா மாவட்டத்தை சேர்ந்த யோனிக்மியா, 33, பீஹார் மாநிலம், மிஜாபர்பூரைச் சேர்ந்த சந்திரகிஷோர், 20, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.

வாலிபர்களிடம் மொபைல் போன் பறிப்பு

கொடுங்கையூர்: எருக்கஞ்சேரியைச் சேர்ந்த மோகன்குமார், 28, ஐ.டி., நிறுவனத்தில் பணி முடித்து நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நடந்து சென்றார். அவரது மொபைல் போனை பறித்து, மர்ம நபர் தப்பினார். அதேபோல், வியாசர்பாடியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவர் பாலா, 19, பகுதி நேர வேலையான துாய்மை பணியை, எம்.கே.பி.நகரில் நடந்து சென்றார். பைக்கில் வந்த வாலிபர், பாலாவின் மொபைல் போனை பறித்து தப்பினார்.

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது

ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த, பெயின்டர் முருகன், 42, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு, மது போதையில் வந்தார். இதை தட்டிக்கேட்ட, அவரது மனைவியும் துாய்மை பணியாளருமான பிரியாவின், 40, கழுத்தை காய்கறி நறுக்கும் கத்தியால் குத்தினர். கிண்டி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு, ஆறு தையல் போட்டப்பட்டது. ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து, முருகனை நேற்று கைது செய்து, ஆலந்துார் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மின்னல் தாக்கிய தொழிலாளி

அரசு மருத்துவமனையில் அனுமதி

மயிலாப்பூர்: மயிலாப்பூர் அப்பு தெருவைச் சேர்ந்தவர் நவீன், 19; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, மேல்நிலை நீர் தொட்டியை சுத்தம் செய்து, அதனருகே நின்றிருந்தார்.

அப்போது, அவர் மீது மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us