தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : அக் 21, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டின் பூட்டை உடைத்த திருடன் சிக்கினான்

மதுரவாயல்: மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சங்கர், 44. கடந்த 20ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில், குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த இருவர், பீரோவை திறந்து திருட முயன்றனர். சத்தம் கேட்டு விழித்த சங்கர், மின் விளக்கை போட்டதும் இருவரும் தப்பினர். விசாரித்த மதுரவாயல் போலீசார், மதுரவாயலைச் சேர்ந்த குணால், 23, என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

‘ஆன்லைன்’ லாட்டரி விற்றவருக்கு ‘காப்பு’

விருகம்பாக்கம்: அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள், விருகம்பாக்கம், இந்திரா நகர் 2வது தெருவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் 50, என்பவர் ‘ஆன்லைன்’ வாயிலாக லாட்டரி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே லாட்டரி விற்பனை தொடர்பாக, இவர் மீது 5 வழக்குகள் உள்ளன.

புது துணிகளை ‘அள்ளி’ சென்ற மேலும் ஒருவர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர், இரட்டை மலை சீனிவாசன் முதல் தெருவில், ஜவுளிக்கடை நடத்தி வருபவர் வசந்தராஜ், 31. கடந்த 17ம் தேதி, இவரது கடைக்கு வந்த ஆறு பேர், 15,000 ரூபாய்க்கு துணி எடுத்துள்ளனர். ஆனால், பணத்தை கொடுக்காமல், கத்திமுனையில் மிரட்டி தப்பினர். விசாரித்த திருவொற்றியூர் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த ஜெயகுமார், 23, உள்ளிட்ட ஐந்து பேரை, மறுநாளே கைது செய்தனர்; 9,000 ரூபாய் மதிப்பிலான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமைறைவாக இருந்த எண்ணுாரைச் சேர்ந்த அருண்குமார், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, 3,000 ரூபாய் மதிப்பிலான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

வடக்கு கடற்கரை: மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் சந்திப்பு பகுதியில், ‘பேன்சி ஸ்டோர்ʼ நடத்தி வருபவர் தமீம் அன்சாரி, 54. கடந்த 19ம் தேதி இரவு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு , 10,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. விசாரித்த வடக்கு கடற்கரை போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த அருண், 26, என்பவரை கைது செய்தனர்; 8,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

திருவொற்றியூர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சிவா, 23. திருவொற்றியூர் சந்தை பகுதியில் தங்கி, எலக்ட்ரிக் கடையில் பணிபுரிந்தார். இவர் இன்ஸ்டாகிராம் வழியாக, தேனியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அறிமுகமாகி உள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு வாரமாக அப்பெண் பேசவில்லை. இதனால் மனமுடைந்த சிவா, நேற்று முன்தினம் இரவு, அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us