UPDATED : அக் 21, 2026 05:49 PM
ADDED : அக் 21, 2026 05:36 PM
அண்ணா நகர்: அண்ணா நகர் மண்டலத்தில் வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது, மழைநீர் தேங்குவது குறைந்துள்ளது.
அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு பகுதிகளில், கடந்தாண்டு மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகளில் வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.
குறிப்பாக, அண்ணா நகர் பிரதான சாலையில் உள்ள வடிகால்கள், கூவம் ஆற்றுக்கு செல்லும் பழைய வளைவு வடிவிலான குழாய்களுடன் இணைக்கப்பட்டன. அரும்பாக்கம் 100 அடி சாலையிலும் வடிகால்கள் அமைக்கப்பட்டன.
இதன் பலனாக, கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில், தற்போது தண்ணீர் நிற்கவில்லை. சில இடங்களில் தேங்கும் தண்ணீரும், சில மணி நேரங்களில் வடிந்து விடுகிறது.
இதனால், அண்ணா நகர் மண்டலத்தில் மழைக்கால பாதிப்புகளை குறைப்பதில் வடிகால் கட்டமைப்புகள் முக்கியபங்கு வகித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
