தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : நவ 06, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

13 ‘ஹூக்கா’ போதை மையங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னையில் செயல்படும், ‘ஹூக்கா பார்கள்’ எனும் போதை மையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அந்த மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி, தேனாம்பேட்டை, வேப்பேரி உட்பட, 14 ஷூக்கா பார்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், 13 மையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்ததால், அவற்றை மூடியுள்ளனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரிய தம்பதியின் நகை திருடிய இருவருக்கு ‘கம்பி’

செங்குன்றம்: செங்குன்றத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரிய தம்பதி இம்மானுவேல் –- ஜோஸ்மின். கடந்த 1ம் தேதி இவர்களது வீட்டின் பீரோவில் இருந்த 31 சவரன் தங்க நகைகள், 40,000 ரூபாய் திருட்டு போயிருந்தன. இது குறித்த புகாரை அடுத்து, செங்குன்றம் போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்ட மதுரவாயலைச் சேர்ந்த சூர்யா, 24, விஜயகுமார், 29 ஆகியோரை, விழுப்புரத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். 17 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி தொடர்கிறது.

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது

சென்னை: ஒடிசாவில் இருந்து, சென்னைக்கு ரயிலில் வந்த அம்மாநிலத்தைச் சேர்ந்த பிக்ஸ்வான், 22, பதால் ஜென்னா, 20, சந்தன்தாஸ், 22 ஆகியோரை, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், ‘கமிஷன்’ தொகைக்கு ஆசைப்பட்டு, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களின் கூட்டாளியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷாகின், ஒடிசா வாலிபர் சந்தோஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணிற்கு ‘டார்ச்சர்’ கொடுத்து வந்தவருக்கு ‘காப்பு’

கோயம்பேடு: நெற்குன்றத்தைச் சேர்ந்த 48 வயது பெண். இவர், தன் வீட்டின் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சீனிவாசன், 51. இரண்டு ஆண்டுகளாக, அப்பெண் வீட்டின் அருகே நடந்து செல்லும்போது, சீனிவாசன் ஆபாசமாக பேசி தொந்தரவு அளித்து வந்துள்ளார். வழக்கம்போல, கடந்த 4ம் தேதி மதியம் சீனிவாசன் மீண்டும் அவதுாறாக பேசியுள்ளார். இது குறித்த புகாரையடுத்து, கோயம்பேடு போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நெற்குன்றம், புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை, நேற்று கைது செய்தனர்.

லாரி ஓட்டுநரின் போன் திருடியவர் சிக்கினார்

கோயம்பேடு: கோயம்பேடு பழச்சந்தையில் லாரியில் துாங்கிய ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரிடம் மொபைல் போன்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கைலாஸ் ஞானோபா, 40; லாரி ஓட்டுநர். இவர், நண்பர் ஒருவருடன் லாரியில் சீத்தாப்பழங்களை ஏற்றிக்கொண்டு, கோயம்பேடு பழச்சந்தைக்கு வந்தார். பின்னர், இருவரும் லாரியில் படுத்து துாங்கினர். காலையில் எழுந்து பார்த்தபோது, இருவரது மொபைல் போன்களும் திருடுபோனது தெரியவந்தது. விசாரித்த கோயம்பேடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட நெற்குன்றத்தைச் சேர்ந்த சந்திரன், 39, என்பரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us