
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., மாநாட்டிற்கு சென்றவர் மாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்தவர் செபஸ்டின், 40. நடிகர் விஜயின், த.வெ.க., கட்சியின் உறுப்பினரான இவர், மதுரையில் 21ம் தேதி நடந்த த.வெ.க., மாநாட்டிற்கு நண்பர்களுடன் வேனில் சென்றார். அங்கு மாயமானார். சமூக வலைதளம் மூலம் நண்பர்கள் தேடி வருகின்றனர்.
***
ரயில் மோதி மதுரை வாலிபர் 'சீரியஸ்'
சென்னையில் பணிபுரிபவர் சிவா, 24. சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்தவர், எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று காலை தாம்பரம் வந்தார். அங்கிருந்து சென்னை வருவதற்காக, மின்சார ரயிலில் ஏற தண்டவாளத்தையொட்டி நடந்து சென்றபோது, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் சிக்கி பலத்த காயமடைந்தார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
***

