/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர்: பெயின்டர் மீது கல்லால் தாக்குதல்
/
கிரைம் கார்னர்: பெயின்டர் மீது கல்லால் தாக்குதல்
கிரைம் கார்னர்: பெயின்டர் மீது கல்லால் தாக்குதல்
கிரைம் கார்னர்: பெயின்டர் மீது கல்லால் தாக்குதல்
ADDED : ஜன 02, 2026 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடிப்பாக்கம்: - கீழ்கட்டளை, காந்தி நகரைச் சேர்ந்தவர் சின்னய்யா, 40; பெயின்டர். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 30 என்பவருக்கும், பணம் கொடுக்கல் - வாங்கலில் தகராறு இருந்துள்ளது.
இருவரும், நேற்று முன்தினம் இரவு மது அருந்திய நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று சின்னய்யா வீட்டு வாசலில் துாங்கிக் கொண்டிருந்தபோது, அவரின் தலையில் செங்கல்லால் பலமுறை தாக்கி கிருஷ்ணராஜ் தப்பினார். சுயநினைவு இழந்த சின்னய்யா, மேல்சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மடிப்பாக்கம் போலீசார் கிருஷ்ணராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.