/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோலம் போட்ட பெண்ணிடம்:சில்மிஷம் செய்தவருக்கு வலை
/
கோலம் போட்ட பெண்ணிடம்:சில்மிஷம் செய்தவருக்கு வலை
ADDED : ஜன 02, 2026 05:36 AM
பெரம்பூர்: வீட்டின் முன் கோலம் போட்ட பெண்ணிடம் சில்மிஷம் செய்து தப்பியவரை, போலீ சார் தேடி வருகின்றனர்.
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். புத்தாண்டை மு ன்னிட்டு, நேற்று அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பி சென்றார்.
இது குறித்து செம்பி யம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது போதையில் வந்த இளைஞர், சிறுமியின் கையை பிடித்து இழுத்து சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து, வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரித்த வடபழனி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, பாலியல் சீண் டலில் ஈடுபட்ட சூளைமேடு, பெரியார் பாதையைச் சேர்ந்த கவுதம், 23 என்பவரை கைது செய்தனர்.

