தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண்ணிற்கு பாலியல் தொல்லை

பெண்ணிற்கு பாலியல் தொல்லை

பெண்ணிற்கு பாலியல் தொல்லை


UPDATED : ஜூன் 06, 2026 07:03 PM

ADDED : ஜூன் 06, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 07:03 PM ADDED : ஜூன் 06, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாப்பூர்: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த, 19 வயது பெண், அதே பகுதியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார்.

சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில், இம்மாதம் 5ல் தன் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து தப்பினார்.

மயிலாப்பூர் போலீசார் விசாரித்து, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மதன், 39, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

---

ஓட்டுநரிடம் பணம் பறிப்பு

பெரியமேடு: புதுவண்ணாரப்பேட்டை, பர்மா காலனியைச் சேர்ந்தவர் சந்துரு பாண்டியன், 51; ஆட்டோ ஓட்டுநர். 4ம் தேதி இரவு, சவாரி முடித்து வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக வந்த ஆட்டோவை, இருவர் வழிமறித்தனர்.

கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து 2,000 ரூபாயை பறித்து தப்பினர். பிடிக்க வந்த மக்கள் மீது கற்கள் வீசிச்சென்றனர்.

பெரியமேடு போலீசார், ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை உதயன், 22, என்பவரை நேற்று கைது செய்தனர்; மற்றவரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us