UPDATED : ஜூலை 13, 2026 06:53 PM
ADDED : ஜூலை 13, 2026 06:02 PM
வண்ணாரப்பேட்டை:-ஏழுகிணறு, சிறைச்சாலை சாலையில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு, மூன்று வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அசாருதீன், 21, அப்துல் மஜீத், 19, முகமது பைசல், 19, ஆகிய இவர்கள், பாரிமுனை, பர்மா பஜாரில் உள்ள மொபைல் கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது.
அதே பகுதியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாபன், 32, குருபடா, 19, சவுரவ், 19, ஆகியோரிடம் கஞ்சா வாங்கி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதில் அசாருதீன், பாபன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அப்துல் மஜீத், முகமது பைசல் ஆகியோரை எச்சரித்து அனுப்பினர்.
