ADDED : ஆக 24, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது
டி.பி.,சத்திரம்: டி.பி.சத்திரம், 19-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் 43; தனியார் நிறுவன காவலாளி. கடந்த 22ம் தேதி மாலை, நண்பருடன் பைக்கில், டி.பி.சத்திரம், 1-வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் ஐவர் கும்பல் வழிமறித்து, கத்திமுனையில் மொபைல் போன், இருசக்கர வாகன சாவியை பறித்து தப்பினர். இது குறித்து விசாரித்த டி.பி.சத்திரம் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த அஜித், 27, தீபக், 27, குணசேகரன், 23 ஆகியோரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த அனுஷ் 26, ரித்திக் 23 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
