தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறுமி தற்கொலை முயற்சி

சிறுமி தற்கொலை முயற்சி

சிறுமி தற்கொலை முயற்சி


UPDATED : ஆக 29, 2026 10:44 PM

ADDED : ஆக 29, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 10:44 PM ADDED : ஆக 29, 2026 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டேரி: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சக மாணவர்கள் கேலி செய்ததால் மன உளைச்சலில் இருந்தவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் 30 மாத்திரைகளை உட்கொண்டார். கடந்த 27ம் தேதி இரவு, மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது

ஓட்டேரி: ஓட்டேரி, வாழைமா நகரைச் சேர்ந்தவர் ஐசக் ஜெபக்குமார், 22; சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரது வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தி, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், பெரம்பூரைச் சேர்ந்த அஜித்குமார், 28, தக்கோலத்தைச் சேர்ந்த சுமன், 28, கோபாலபுரத்தைச் சேர்ந்த டேவிட் பிரின்ஸ், 23, உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்ணுக்கு 'லவ்' டார்ச்சர்; உறவினர் கைது

எம்.கே.பி.நகர்: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 22 வயது பெண்; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய போது, உறவினரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுதாகர், 30, பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததுடன், தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். எம்.கே.பி.நகர் போலீசார் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக பெண் பேசுவதை நிறுத்தியதால், பல்வேறு மொபைல்போன் எண்களில் தொடர்பு கொண்டு சுதாகர் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கடந்த மாதம் 10ம் தேதி புகார் அளிக்கப்பட்ட நிலையில், இனி தொல்லை தரமாட்டேன் என எழுதி வாங்கி, போலீசார் அவரை அனுப்பி வைத்திருந்தனர்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

குமரன் நகர்: திருநின்றவூரைச் சேர்ந்தவர் 18 வயது பெண்; சி.ஏ., பவுண்டேஷன் படித்து வருகிறார். பட்டாபிராமைச் சேர்ந்த அரவிந்த், 20, என்பவருடன் பழகி வந்த நிலையில், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். கடந்த 26ம் தேதி, பெண்ணின் நண்பர் கவிராஜை மிரட்டி, அவரது மொபைல்போன் மூலம் பெண்ணை வரவழைத்த அரவிந்த், அவரிடம் தகராறு செய்து தாக்கியதுடன், கவிராஜையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்படி அரவிந்தை குமரன் நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

வலி நிவாரண மாத்திரைகள் திருடிய இருவருக்கு கம்பி

மதுரவாயல்: தி.நகரை சேர்ந்தவர் மெஹுல் டி.ஷா, 46; ஆலப்பாக்கம் கணேஷ் நகர் மெயின் ரோட்டில் மருந்து சப்ளை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடோனில் கடந்த ஜூன் மாதம் மருந்துகளை சரிபார்த்தபோது, 14,400 வலி நிவாரண மாத்திரைகள் காணாமல் போனது தெரிந்தது. சி.சி.டி.வி.,யை ஆய்வு செய்த போலீசார், முன்னாள் ஊழியர்களான நவமணி, 29, மற்றும் சாய்ரா பானு, 21, ஆகியோரை கைது - -எப்போது?- செய்தனர். இருவரும், சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டதும், மாத்திரைகளை திருடி, நிறுவன டிரைவரிடம் கொடுத்து பணம் பெற்றதும் தெரிந்தது. மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

துாங்கியவரிடம் திருடியவருக்கு 'காப்பு'

கோயம்பேடு: வண்டலுாரைச் சேர்ந்தவர் அருண்ம, 49. கடந்த 24ம் தேதி இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துாங்கிக் கொண்டிருந்தபோது, அவரது சட்டைப்பையில் இருந்த 2,870 ரூபாய் மற்றும் மொபைல்போன் திருடப்பட்டது. இது தொடர்பாக ரமேஷ், 36, ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த எண்ணுார் பர்மா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், 36, நேற்று கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.. விசாரணையில், திருடிய பணம் மற்றும் மொபைல்போனை விற்று செலவு செய்ததும், அவர் மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

போதை வழக்கில் மும்பை ஆசாமிக்கு 'கம்பி'

புளியந்தோப்பு: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 10,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சஞ்சய், 18, கைது செய்யப்பட்டார். மாத்திரைகளை விற்ற கும்பலை தேடி தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். இதில் தொடர்புடைய பங்கஜ், அவரது மனைவி பாயல், தம்பி சுராஜ் சர்மா, 26, ஆகியோரை தேடி வந்த நிலையில், சுராஜ் சர்மா சென்னை உயர் நீதிமன்றம் அருகே இருப்பது தெரிந்து அங்கு விசாரித்ததில், அண்ணன் பங்கஜுக்கு ஜாமின் பெற வந்தது தெரிந்தது. இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுராஜ் சர்மா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us