UPDATED : ஆக 29, 2026 10:45 PM
ADDED : ஆக 29, 2026 10:41 PM
முகப்பேர்:அடிப்படை வசதிகள் செய்து தராத கட்டுமான நிறுவனத்தைக் கண்டித்து, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முகப்பேர் அண்ணாமலை அவென்யூவில் உள்ள குடியிருப்பில் 370 வீடுகளில் 1,800க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
இங்கு, 2024 முதல் வசித்து வருகிறோம். மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வசதிக்காக வீடு ஒன்றுக்கு 7.50 ரூபாய் லட்சம் வீதம், 30 கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதலாக பெற்றனர். ஆனால், இதுவரை அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. தினமும் 23 லாரிகளில் கொண்டு வரும் தண்ணீருக்கு, மாதம் 9.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. முறையான சோலார் வசதியும் இல்லை. பராமரிப்புக்கு மாதம் 32 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால், அமைச்சர்களிடம் முறையிடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
