தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு


UPDATED : செப் 09, 2026 08:51 PM

ADDED : செப் 09, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 08:51 PM ADDED : செப் 09, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கணேசன், 52. சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தின், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க, கடந்த 7ம் தேதி வந்தார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு '108' ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டியிடம் செயின் பறித்த இருவர் கைது

அண்ணா சதுக்கம்: திருவல்லிக்கேணி, புதிய கட்டை தொட்டி தெருவைச் சேர்ந்தவர் தையல்நாயகி, 52. கடந்த, 4ல், வீட்டு படிக்கட்டில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றி கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், தையல்நாயகி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் செயினை பறித்து தப்பினார்.

அண்ணாசதுக்கம் போலீசார் விசாரித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டேவிட், 31, திண்டிவனத்தைச் சேர்ந்த லோகேஷ், 27, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். 8 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us