ADDED : செப் 09, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
சென்னை, செப். 10–
ரயில்வே ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.இ.எஸ்., தொழிற்சங்கம் சார்பில் பெரம்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தொழிற்சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரியபிரகாஷ், நிர்வாக பொதுச்செயலர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து, சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரியபிரகாஷ் கூறுகையில், ‘‘ரயில்வே பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ரயில்வே பணிமனைகள் சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், பயோமெட்ரிக் முறையில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்,’’ என்றார்.
