UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
பேருந்து மோதி காவலாளி பலி
அடையாறு: இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45; இந்திரா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி. நேற்று காலை, டீ குடிக்க, எம்.ஜி.சாலையை கடந்து செல்ல முயன்றபோது, திருவான்மியூரில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அடையாறு போக்குவரத்து போலீசார், பேருந்து ஓட்டுநரான வியாசர்பாடியை சேர்ந்த செல்வம், 34, என்பவரை கைது செய்தனர்.
