தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின்தடையால் துாக்கம் தொலைத்த மாணிக்கம் நகர் மக்கள்

மின்தடையால் துாக்கம் தொலைத்த மாணிக்கம் நகர் மக்கள்

மின்தடையால் துாக்கம் தொலைத்த மாணிக்கம் நகர் மக்கள்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்: இரவு முழுதும் மின்தடையால், மாணிக்கம் நகர் மக்கள் துாக்கமின்றி தவிர்த்தனர்.

திருவொற்றியூர் – மாணிக்கம் நகரில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 1,500 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, இந்த நகரின் ஒரு பகுதி முழுதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. அரை மணி நேரம் கழித்து சீரான மின் வினியோகம், மீண்டும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடையானது.

இதனால், அப்பகுதி மக்கள் துாக்கமின்றி தவித்தனர். தொடர்ந்து, நேற்று காலை, 11:00 க்கும் மீண்டும் தடைப்பட்ட மின்சாரம், மதியம் சீரானது. மாணிக்கம் நகரில் தரையின் கீழ் புதைக்கப்பட்ட மின்வயர் பழுது காரணமாகவே, மின்சாரம் தடைப்பட்டதாக கூறப்படுகிறது.

* ஆவடி காமராஜர் நகர் பகுதிகளுக்கு ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. காமராஜ் நகர் மின்னுாட்டி மற்றும் ஜம்பர் பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது.

இதனால், காமராஜர் நகர், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. 11:55 மணியளவில் பழுது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us