/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
/
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்
ADDED : மே 02, 2025 12:39 AM
கோயம்பேடு, கோயம்பேடு சந்தை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக, சந்தை 'சி' - சாலை உள்ளது.
இச்சாலையில், ஆம்னி பேருந்து நிலையம், கோயம்பேடு காவல் நிலையம், சி.எம்.டி.ஏ., அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.
இச்சாலை வழியாக ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
கோயம்பேடு சந்தையை ஒட்டியுள்ளதால் மலர், காய்கறி மற்றும் பழ அங்காடிகளுக்கு செல்லும் நுழைவாயில்கள், இச்சாலையில் அமைந்துள்ளன.
தற்போது, இச்சாலையில் மெட்ரோ ரயில் பணிகளும், மழைநீர் வடிகால்வாய் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், சாலை குறுகலாகி, நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இச்சாலையில், காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கோயம்பேடு சந்தை பி - சாலை நோக்கி செல்லும் பகுதியில், சந்தையை ஒட்டிய பகுதியில் ஏராளமான நடைபாதை கடைகள் முளைத்துள்ளன.
அதே சாலையின் எதிர் புறம் ஆட்டோ, லோடு வேன்கள், பைக் என, வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இச்சாலை மேலும் குறுகலாகி, கடும் நெரிசல் நிலவி வருகிறது.
ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள், வளைவில் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. எனவே, இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.