/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கி அதிகாரியை தாக்கிய வாடிக்கையாளர் கைது
/
வங்கி அதிகாரியை தாக்கிய வாடிக்கையாளர் கைது
ADDED : அக் 25, 2025 04:57 AM
சென்னை: வங்கி அதிகாரியை தாக்கிய வாடிக்கையாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியில் மண்டல தலைவராக பணியாற்றி வருபவர் ஆனந்த், 50. சில மாதங்களுக்கு முன் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் அபிஷேக், 32 என்பவர், வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்.
அதற்கு, உங்களது வங்கி கணக்கு உள்ள கிளையில் சென்று கேட்குமாறு கூறி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மதியம் வங்கிக்கு வந்து, கணக்கு விபரங்களை கேட்டு தொந்தரவு செய்ததுடன், ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.
இது குறித்து விசாரித்த ஆயிரம்விளக்கு போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அபிஷேக்கை நேற்று கைது செய்தனர்.
அபிேஷக் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை பணத்தை முறையாக செலுத்தாததால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டு அடிக்கடி வங்கிக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

