/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிலாளர்களை பாராட்டிய மெட்ரோ ரயில் நிர்வாகம்
/
தொழிலாளர்களை பாராட்டிய மெட்ரோ ரயில் நிர்வாகம்
ADDED : அக் 25, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் பெண் ஒருவர், தன் தங்கக் கம்மல் ஒன்றை சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் தவறவிட்டார்.
இதையறிந்த, மெட்ரோ கட்டுமான பணியாளர்கள், வாளிகள் மற்றும் குவளைகளை பயன்படுத்தி, மழைநீரை வெளியேற்றி, காணாமல் போன கம்மலை மீட்டு, பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டுமான பணியாளர்கள் பரிகுல், கலாம், சுமோன், பரியுல், அமீர் ஆகிய ஐந்து பேருக்கும், தலா 2,000 ரூபாய் பரிசு, பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி கவுரவித்தது.

