/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூலி தொழிலாளிக்கு வெட்டு வண்ணை ரவுடிக்கு மாவு கட்டு
/
கூலி தொழிலாளிக்கு வெட்டு வண்ணை ரவுடிக்கு மாவு கட்டு
கூலி தொழிலாளிக்கு வெட்டு வண்ணை ரவுடிக்கு மாவு கட்டு
கூலி தொழிலாளிக்கு வெட்டு வண்ணை ரவுடிக்கு மாவு கட்டு
ADDED : டிச 25, 2024 12:17 AM

புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் விக்கி, 22. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி 'பாம்' முரளிக்கும், இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்த விக்கியின் உறவினரான சந்திரசேகர், 50, என்பவர், அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, சந்திரசேகருக்கும், 'பாம்' முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பானது.
இதில் ஆத்திரமடைந்த 'பாம்' முரளி, கத்தியால் சந்திரசேகர் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு தப்பினார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரசேகரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட 'பாம்' முரளியை கைது செய்து, புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கிருந்து, 'பாம்' முரளி தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில், முரளியின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போலீசார் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், அவரது வலது கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. நேற்று, போலீசார் முரளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.