/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு டெலிவரி நபரை வெட்டி போன் பறிப்பு
/
உணவு டெலிவரி நபரை வெட்டி போன் பறிப்பு
ADDED : பிப் 13, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம், மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகேஷ், 25. இவர், 'ஆன்லைன்' வாயிலாக உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் முகேஷை வழிமறித்து கத்தியால் வெட்டி, மொபைல் போன் பறித்து சென்றனர்.
இதில் காயம் அடைந்த முகேஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரை அடுத்து, வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.