/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலியை சந்தித்தவருக்கு அரிவாள் வெட்டு
/
காதலியை சந்தித்தவருக்கு அரிவாள் வெட்டு
ADDED : மார் 03, 2024 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல், கதிர்வேடு, அண்ணா நினைவு நகரைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி, 22. இவர், நேற்று முன்தினம் மாலை, புழல், கங்காதரன் தெருவில், அவரது காதலியை பார்க்க சென்றுள்ளார்.
உடன் நண்பர் இம்மானுவேல் என்பவரும் சென்றுள்ளார்.
அப்போது, தீபன் சக்கரவர்த்தியை, காதலியின் அண்ணன் இளம்பரிதி, 19 என்பவர் கத்தியால் தலையில் வெட்டி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தீபன் சக்கரவர்த்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரித்த புழல் போலீசார், இளம்பரிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

