/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் 21ல் 'சைக்ளோத்தான்' 4 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்
/
இ.சி.ஆரில் 21ல் 'சைக்ளோத்தான்' 4 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்
இ.சி.ஆரில் 21ல் 'சைக்ளோத்தான்' 4 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்
இ.சி.ஆரில் 21ல் 'சைக்ளோத்தான்' 4 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 18, 2025 12:32 AM
சென்னை, 'சைக்ளோத்தான்' நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், வரும் 21ம் தேதி, இ.சி.ஆரில் நான்கு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
தமிழக விளையாட்டு வளர்ச்சி ஆணையம் சார்பில், வரும் 21ம் தேதி, அதிகாலை 4:30 முதல் 8:30 மணி வரை, இ.சி.ஆர்., மாயாஜால் முதல் மாமல்லபுரம் வரை, 'சைக்ளோத்தான் சென்னை - 25' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனால், அந்நேரத்தில் இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என, தாம்பரம் காவல் கமிஷனரகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம் விபரம்:
★ சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், இ.சி.ஆர்., அக்கரை சந்திப்பில் வலது பக்கம் திரும்பி, ஓ.எம்.ஆர்., சென்றடைந்து, அங்கிருந்து படூர் வழியாக செல்ல வேண்டும்.
★ மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், பூஞ்சேரி சந்திப்பு வழியாக, எஸ்.எஸ்.என்., ரவுண்டானா, கேளம்பாக்கம், சோழிங்கநல்லுார், அக்கரை வழியாக செல்ல வேண்டும்.