/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டி70, எம்70, ஏ51, 51ஏ' பஸ் வேளச்சேரியில் இயக்கம்
/
'டி70, எம்70, ஏ51, 51ஏ' பஸ் வேளச்சேரியில் இயக்கம்
ADDED : மார் 07, 2024 12:28 AM
வேளச்சேரி,வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இதனால், விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன், வேளச்சேரி விரைவு சாலை வழியாக இயக்கப்பட்ட, 'டி70, எம்70, ஏ51, 51ஏ' ஆகிய பேருந்துகள், காந்தி சாலை வழியாக இயக்கப்பட்டன.
இதனால், விரைவு சாலை பகுதியில் வசிப்போருக்கு, அடிக்கடி பேருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பணி முடிந்து மேம்பாலம் திறந்த நிலையில், டி70, எம்70, ஏ51, 51ஏ ஆகிய பேருந்துகள், விரைவு சாலை வழியாக, நேற்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. 10 நிமிட இடைவெளியில், இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதற்கான உத்தரவை, மாநகர போக்குவரத்து இணை இயக்குனர், அந்தந்த மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த வழித்தடத்தில், பேருந்துகள் முறையாக இயக்கப்படுகின்றனவா என, வேளச்சேரி கிளை மேலாளர் கண்காணிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

