/
புகார் பெட்டி
/
சென்னை
/
குன்றத்துார் மேட்டு தெருவில் தினமும் நெரிசல்
/
குன்றத்துார் மேட்டு தெருவில் தினமும் நெரிசல்
ADDED : செப் 09, 2025 08:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், சேக்கிழார் மணி மண்டபம் அருகே, மேட்டுத்தெரு உள்ளது. இந்த வழியே ஏராளமானோர், வாகனங்களில் செல்கின்றனர்.
இந்த தெருவில், சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து சிறு உணவகம், நடைபாதை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால், சாலை குறுகி காலை, மாலை நேரங்களில் மிக கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்த சாலையில் செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, போக்கு வரத்தை ஒழுங்குப் படுத்த வேண்டும்.
- ஆர்.கணேசன், குன்றத்துார்.