/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாங்கல் ஏரி துார்வாரும் பணி துவக்கம்
/
தாங்கல் ஏரி துார்வாரும் பணி துவக்கம்
ADDED : மே 14, 2025 12:40 AM
பல்லாவரம் :பல்லாவரம் சட்டசபை தொகுதியில் அடங்கிய பொழிச்சலுார் ஊராட்சியில், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி உள்ளது.
பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த தாங்கல் ஏரி, பராமரிப்பின்றி காலி இடமாக உள்ளது.
'இப்படியே போனால், இதை ஆக்கிரமித்து வீட்டுமனையாக்கி விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அதனால், தாங்கலை துார்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி, மழைநீர் தேக்கமாக மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, இ.எப்.ஐ., என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம், 16 லட்சம் ரூபாய் செலவில், இவ்வேரியை துார்வாரி ஆழப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி ஆகியோர், இப்பணியை துவக்கி வைத்தனர்.
ஏரியை துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணியை இ.எப்.ஐ., நிறுவனம் மேற்கொள்ளும். அதன்பின், பல்லாவரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு, நடைபாதை, பூங்கா, மின் விளக்குகள் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.