/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமான பூங்கா தடுப்புச்சுவர் சமூக விரோதிகள் அட்டூழியம்
/
சேதமான பூங்கா தடுப்புச்சுவர் சமூக விரோதிகள் அட்டூழியம்
சேதமான பூங்கா தடுப்புச்சுவர் சமூக விரோதிகள் அட்டூழியம்
சேதமான பூங்கா தடுப்புச்சுவர் சமூக விரோதிகள் அட்டூழியம்
ADDED : ஜன 30, 2024 12:16 AM
கீழ்ப்பாக்கம்,கீழ்ப்பாக்கம் பகுதியில், சேதமடைந்த பூங்கா தடுப்பு சுவர் சீரமைக்கப்படாததால், இரவில் சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டில், கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை உள்ளது. இங்குள்ள ஹால்ஸ் சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை இணைப்புப் பகுதியில், சாலையோர பூங்கா செயல்படுகிறது. காலையும் மாலையும், இப்பூங்காவை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள இப்பூங்காவின் தடுப்புச்சுவர், பல மாதங்களுக்கு முன் சேதமடைந்து, பூங்காவிலேயே விழுந்துள்ளது. இதனால், சமூக விரோதிகள் பூங்காவில் அத்துமீறும் வாய்ப்புள்ளதால், தடுப்புச் சுவரை உடனே சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:
பல நாட்களுக்கு முன், பூங்காவின் தடுப்புச்சுவர் சேதமடைந்து விழுந்தது. இதை, தற்போது வரையும் சீரமைக்காமல் உள்ளனர். இதுதொடர்பாக பூங்காவின் வெளிப்புறத்தில் உள்ள 'கியூஆர்' கோடு வாயிலாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்புச்சுவர் இல்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வு செய்து, சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.