/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமடைந்த மாநில நெடுஞ்சாலை புழுதி மண்டலமாக மாறிய மணலி
/
சேதமடைந்த மாநில நெடுஞ்சாலை புழுதி மண்டலமாக மாறிய மணலி
சேதமடைந்த மாநில நெடுஞ்சாலை புழுதி மண்டலமாக மாறிய மணலி
சேதமடைந்த மாநில நெடுஞ்சாலை புழுதி மண்டலமாக மாறிய மணலி
ADDED : பிப் 17, 2024 12:23 AM

மணலி, மணலி மண்டலம் 16வது வார்டு, பர்மா நகர் - சடையங்குப்பம் பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில், இரும்பு உருக்காலை, கன்டெய்னர் பெட்டக முனையங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இதன் காரணமாக, தனிமனித போக்குவரத்து மட்டுமின்றி, கன்டெய்னர், கனரக போக்குவரத்தும் மிகுதியாக இருக்கும்.
இந்த நிலையில், ஊருக்குள் இருந்து வெளியேற சடையங்குப்பம் மேம்பாலம், பர்மா நகர் உயர்மட்ட பாலம், பர்மா நகர் - வைக்காடு சந்திப்பு இணைப்பு சாலை ஆகிய மூன்று வழித்தடங்கள் உள்ளன.
சடையங்குப்பம் மேம்பாலப்பணிகள் முடியவில்லை. பர்மா நகர் உயர்மட்ட பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், கனரக போக்குவரத்திற்கு மாநில நெடுஞ்சாலையான பர்மா நகர் -- வைக்காடு சந்திப்பு இணைப்பு சாலையே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.
இச்சாலையில் ஆங்காங்கே தார்ச்சாலை பெயர்ந்து, மரண பள்ளங்களாக மாறி வருகின்றன. மழைக்காலங்களில், மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கும். வெயில் காலம் என்பதால், மண்டிய மண் துகள்களால் புழுதி மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் முன் செல்லும் வாகனங்கள் தெரியாமலும், சாலையில் இருக்கும் மரண பள்ளங்கள் தெரியாமலும், விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.