/
புகார் பெட்டி
/
சென்னை
/
மின் கேபிள் பதிக்க பள்ளம் தடுப்பு இல்லாததால் அபாயம்
/
மின் கேபிள் பதிக்க பள்ளம் தடுப்பு இல்லாததால் அபாயம்
மின் கேபிள் பதிக்க பள்ளம் தடுப்பு இல்லாததால் அபாயம்
மின் கேபிள் பதிக்க பள்ளம் தடுப்பு இல்லாததால் அபாயம்
ADDED : செப் 09, 2025 08:38 AM

வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் துணை மின் நிலையம் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது வந்தது.
இதையடுத்து, விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்க, 33 கே.வி., கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள் முடிந்தால், ஆழ்வார் திருநகர் நிலையத்தில் பழுது ஏற்பட்டு மின் தடை நிலவினால், சின்மயா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் வினியோகிக்கப்பட உள்ளது.
இதற்காக வளசரவாக்கம் காமராஜர் சாலையில், மின் கேபிள் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இப்பள்ளத்தைச் சுற்றி முறையான தடுப்புகள் அமைக்காததால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி, பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தடுப்பை ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- சுரேஷ், வளசரவாக்கம்.