/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளம்பர தட்டிகளால் ஆவடியில் ஆபத்து
/
விளம்பர தட்டிகளால் ஆவடியில் ஆபத்து
ADDED : மே 20, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் பகுதியான பட்டாபிராம் முதல் சேக்காடு வரை 1 கி.மீ., துாரத்திற்கு, மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து விளம்பர தட்டிகள் கட்டி வருகின்றன.
காற்று வேகமாக வீசும்போது, இவை வாகன ஓட்டிகள் மீது விழும் சூழல் உள்ளது.
கடந்த வாரம் கூட, திருமுல்லைவாயிலில் பிரபல நிறுவனத்தின் டிஜிட்டல் பெயர் பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இருப்பினும், விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டிய அதிகாரிகளோ, கைகட்டி வேடிக்கை பார்ப்பது வருத்தமாக உள்ளது.
- சண்முகசுந்தரம்,
ஆவடி.