/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் ஆபத்தான பயணம் மாணவர்களால் பயணியர் பீதி
/
பஸ்சில் ஆபத்தான பயணம் மாணவர்களால் பயணியர் பீதி
ADDED : நவ 29, 2025 03:24 AM

வண்ணாரப்பேட்டை: மாநகர பேருந்தில், ஐ.டி.ஐ., மாணவர்கள் 'சாகசம்' என்ற நினைப்பில் விபரீத பயணம் செய்தது, பயணியர் மத்தியில் பீதியை ஏற்படு த்தியது.
எண்ணுார் பேருந்து நிலையத்தில் இருந்து, வள்ளலார் நகர் செல்லும் தடம் எண்: 56ஏ மாநகர பேருந்து, நேற்று காலை 10:00 மணிக்கு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்றது.
வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது, தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடியும், பக்கவாட்டு ஜன்னல் கம்பிகளில் ஏறி விபரீத பயணம் செய்தனர்.
ஓட்டுநர், நடத்துநர் கண்டித்தும், மாணவர்கள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பயணியர் பீதியடைந்தனர். விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அப்பகு தியில் போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

