/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் - செங்கல்பட்டுக்கு நேரடி ரயில் கோரி பொது மேலாளருக்கு கடிதம்
/
திருவள்ளூர் - செங்கல்பட்டுக்கு நேரடி ரயில் கோரி பொது மேலாளருக்கு கடிதம்
திருவள்ளூர் - செங்கல்பட்டுக்கு நேரடி ரயில் கோரி பொது மேலாளருக்கு கடிதம்
திருவள்ளூர் - செங்கல்பட்டுக்கு நேரடி ரயில் கோரி பொது மேலாளருக்கு கடிதம்
ADDED : நவ 29, 2025 03:24 AM
சென்னை: திருவள்ளூரில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டுக்கு, நேரடி மின்சார ரயில் சேவை துவங்க வேண்டும் என, தெற்கு ரயில்வேக்கு, திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிற்கு, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அனுப்பியுள்ள கடிதம்:
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மக்கள் சென்னை வந்து செல்ல புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து வசதி முக்கியமானதாக உள்ளது.
திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கும் மின்சார ரயில் வசதி உள்ளது. ஆனால், திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டுக்கு நேரடி ரயில்கள் இல்லை. போதிய அளவில் அரசு பேருந்துகளும் இயக்கப்ப டுவதில்லை.
திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டிய பயணியர், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து காஞ்சிபுரம் பேருந்து பிடிக்க, பைபாஸ் சாலைக்கு ந டந்து செல்கின்றனர்.
எனவே, திருவள்ளூரில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டுக்கு நேரடி ரயில் சேவை துவங்கினால், பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அறிவிப்பை வரும் ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ள புதி ய கால அட்டவணையில் இடம் பெற செய்ய, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

