/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபாய மின்கம்பங்கள் மணலி பகுதியில் பீதி
/
அபாய மின்கம்பங்கள் மணலி பகுதியில் பீதி
ADDED : பிப் 23, 2024 12:11 AM
மணலி, மணலி, எலந்தனுாரில், மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், அவற்றை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, மணலி, 16வது வார்டு எலந்தனுார் பகுதியில், தரை மற்றும் வான்வழியாக குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் மின்கம்பிகளை இணைக்கும் வகையில் உள்ள மின்கம்பங்கள், ஆங்காங்கே பலத்த சேதமடைந்து உள்ளன.
இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், மின்கம்பம் எந்நேரத்திலும், உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சம்பந்தபட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கவனித்து, சேதமடைந்த மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்களை பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.