/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள பாதிப்பை தடுக்க தரமணியில் வடிகால் கட்ட முடிவு
/
வெள்ள பாதிப்பை தடுக்க தரமணியில் வடிகால் கட்ட முடிவு
வெள்ள பாதிப்பை தடுக்க தரமணியில் வடிகால் கட்ட முடிவு
வெள்ள பாதிப்பை தடுக்க தரமணியில் வடிகால் கட்ட முடிவு
ADDED : மார் 16, 2025 10:02 PM
தரமணி:அடையாறு மண்டலம், 178வது வார்டு, தரமணி பகுதியில் கனமழை பெய்தால், வெள்ள பாதிப்பு ஏற்படும்.
தரமணி ஐ.ஐ.டி., வளாகத்தில் இருந்து வெளியேறும் வெள்ளம், தரமணி வழியாக சதுப்பு நிலம் செல்வதால் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
கடந்த கால மழை பாதிப்பை கருத்தில் கொண்டு, வெள்ள பாதிப்பு அதிகமுள்ள தெருக்களில் மழைநீர் வடிகால் கட்ட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பிள்ளையார்கோவில் தெரு, மசூதி தெரு, அண்ணாதிடல் சாலை, புத்தர் தெரு, பட்டுக்கோட்டை அழகிரி தெரு, ராஜாஜி தெரு, இளங்கோ தெரு, தத்தா தெரு, சச்சிதானந்தாநகர் பிரதான சாலை உள்ளிட்ட, 16 தெருக்களில், 12 கி.மீ., துாரம் மழைநீர் வடிகால் கட்டப்பட உள்ளது.
இதற்காக, 8.64 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு மாதத்தில் வடிகால் பணி துவங்கும். அடுத்த பருவமழைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.