/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு
/
அடையாறில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு
ADDED : ஏப் 13, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு:அடையாறு மண்டலத்தில், 168, 171, 172, 173, 174, 177, 178, 179 ஆகிய வார்டுகளில், சமூக நலக்கூடம், அங்கன்வாடி, கழிப்பறை, உரம் தயாரிப்பு கூடம் என, 14 கட்டடங்கள் உள்ளன.
இவை, 1977ம் ஆண்டு முதல், பல்வேறு காலகட்டங்களில் கட்டியவை. ஒவ்வொரு கட்டடமும், 600 முதல் 40,000 சதுர அடி வரை பரப்பு கொண்டவை.
இவை மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், 14 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அவ்விடங்களில், மாற்று திட்டங்களுக்கான புதிய கட்டடம் கட்டப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

