/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீட்கப்பட்ட 2 குளங்களை மேம்படுத்த முடிவு
/
மீட்கப்பட்ட 2 குளங்களை மேம்படுத்த முடிவு
ADDED : ஜன 19, 2025 12:15 AM
கண்ணகி நகர், சோழிங்கநல்லுார் மண்டலம், கண்ணகி நகரில், 3 ஏக்கர் மற்றும் 1.50 ஏக்கர் பரப்பில், அடுத்தடுத்து இரண்டு குளங்கள் உள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சில கட்சி நிர்வாகிகள் சேர்ந்து, இந்த குளங்களில், கட்டட கழிவுகள், குப்பை கொட்டி ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
குளத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, குளங்களை மீட்டனர்.
பின், பேபால் மற்றும் எக்ஸ்னோரா அமைப்புகள் இணைந்து, 75 லட்சம் ரூபாய் செலவில், சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டது. மீண்டும் வேலியை அகற்றி, ஆக்கிரமிக்க முயற்சி நடந்தது. அதனால், மாநகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இந்த இரண்டு குளங்களையும் மேம்படுத்த, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 3 ஏக்கர் கொண்ட குளத்திற்கு, 2.26 கோடி ரூபாய் மற்றும் 1.50 ஏக்கர் குளத்திற்கு, 1.87 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
ஓரிரு மாதங்களில் நிதி ஒதுக்கி, மேம்பாட்டுப் பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.